இது எப்படி சாத்தியம்? விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து அரவிந்தசாமி
- IndiaGlitz, [Wednesday,December 06 2017]
நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பில் இருக்கும் நிலையில் இதுகுறித்து திரையுலகினர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகர் அரவிந்தசாமி இதுகுறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு வேட்பாளருக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் விஷால் வேட்புமனு விஷயத்தில் அவருக்கு பரிந்துரை செய்த 10 பரிந்துரையாளர்களில் இருவர் எப்படி 24 மணி நேரத்திற்குள் மாற்றம் உண்டாகி ஆட்சேபணையுடன் தேர்தல் ஆணையத்தை அணுகுகின்றார்கள் என்பது புரியவில்லை, இதற்கு சாத்தியமும் இல்லை' என்று கூறியுள்ளார்.
அரவிந்தசாமியின் இந்த கருத்தை ஆதரித்து பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். விஷால் என்னதான் பக்காவாக வேட்புமனுதாக்கல் செய்திருந்தாலும் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து வேட்புமனுவை நிராகரித்திருப்பார்கள், இதெல்லாம் அதிகாரவர்க்கம் செய்யும் அநியாயம் என்பது உள்பட பல கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. மேலும் அரசியலில் இருப்பவர்கள் யாரும் தம்பிராமையா போல் இருப்பது இல்லை என்றும், அனைவரும் சித்தார்த் அபிமன்யூவாகத்தான் இருப்பதாகவும் அரவிந்தசாமி ஸ்டைலில் ஒருவர் கமெண்ட் அளித்துள்ளார்.