தீவிரவாதம் என்றால் என்ன? கமல் கருத்துக்கு அரவிந்தசாமி விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உபி மாநிலத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல் குறிப்பிட்ட தீவிரவாதம் என்றால் என்ன? என்பது குறித்து நடிகர் அரவிந்தசாமி தனது சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தீவிரவாதம் என்றால் சட்டவிரோத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு நபரை, குறிப்பாக பொது மக்களுக்கு எதிராக, அரசியல் நோக்கங்களுக்கான அச்சுறுத்தல் தான் தீவிரவாதம் என்று அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல் நகைச்சுவை நடிகர் கருணாகரன் இதுகுறித்து கூறியபோது, 'கமல் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவருடன் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அவர் கூறியது தவறு என்று நிரூபிக்க தயாரா? என்று கூறியுள்ளார். ஏற்கனவே கமல் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாப்பிட்ட சோறுக்கு நன்றி செய்வேன்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் கமல் பேச்சு

உலகநாயகன் கமல்ஹாசன் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை உடைக்கும் வகையில் அவர் சமீபத்தில் எண்ணூரில் ஆய்வு மேற்கொண்டார்

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

கமல்ஹாசன் சுட்டு கொல்லப்பட வேண்டும்: அகில இந்திய இந்துமகாசபா சர்ச்சை கருத்து

நடிகர் கமல்ஹாசன் 'இந்து தீவிரவாதம்' குறித்து எழுதிய கட்டுரைக்கு ஏற்கனவே பல கண்டனங்களும், வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்

பாண்டிராஜ்-கார்த்தி பட நாயகி ஒப்பந்தம்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்

மழைக்கால உதவிகள் குறித்து ரசிகர்களுக்கு கமல் முக்கிய அறிவுரை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்ததால் தமிழகத்தின் பெரும்பகுதி வெள்ளக்காடாகியுள்ளது.