தீவிரவாதம் என்றால் என்ன? கமல் கருத்துக்கு அரவிந்தசாமி விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உபி மாநிலத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல் குறிப்பிட்ட தீவிரவாதம் என்றால் என்ன? என்பது குறித்து நடிகர் அரவிந்தசாமி தனது சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தீவிரவாதம் என்றால் சட்டவிரோத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு நபரை, குறிப்பாக பொது மக்களுக்கு எதிராக, அரசியல் நோக்கங்களுக்கான அச்சுறுத்தல் தான் தீவிரவாதம் என்று அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல் நகைச்சுவை நடிகர் கருணாகரன் இதுகுறித்து கூறியபோது, 'கமல் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவருடன் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அவர் கூறியது தவறு என்று நிரூபிக்க தயாரா? என்று கூறியுள்ளார். ஏற்கனவே கமல் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.