அடுத்த ஆண்டு நானும் ஒரு இயக்குனர்: அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Saturday,December 16 2017]

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் அரவிந்தசாமி மிக குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். பின்னர் இடையில் சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த அரவிந்தசாமி மீண்டும் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து விஸ்வரூபம் எடுத்தார்.

தற்போது அவர் கைநிறைய படங்களுடன் பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அரவிந்தசாமி, '2018ஆம் ஆண்டு நானும் ஒரு இயக்குனர் தான் என்றும், யாரும் எதிர்பாராத வகையில் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமாவேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்ப்படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் உள்ள வித்தியாசம் வெறும் மொழி வேறுபாடு மட்டுமே என்று கூறிய அரவிந்தச்சாமி, தனக்கு மானசீக குருவாக தனது தந்தை இருப்பதால் தனக்கு வெற்றிகள் கிடைத்து வருவதாக கூறினார். மேலும் பிறப்பு, இறப்பு இந்த இரண்டை தவிர இடையில் உள்ள எந்த நிகழ்வையும் தான் ஞாபகம் வைத்து கொள்ள விரும்புவதில்லை என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக கூறினார். 

More News

'சக்க போடு போடு ராஜா' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் வரும் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாவதால்

4 வயது சிறுமிக்காக பென்சில் நிறுவனம் எடுத்த நெகிழ வைக்கும் புதிய முயற்சி

பொதுவாக இடதுகை பழக்கம் உள்ளவர்களால் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் போல் எளிமையாக அனைத்து செயல்களையும் செய்ய முடியாது.

மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்-முருகதாஸ் படக்குழு?

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'கலப்பை' என்ற ஒரு வதந்தி பரவி வந்தன

நான்கு பேர்களை மட்டும் ஃபாலோ செய்யும் யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் பிசியான காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. குறிப்பாக விஜய்யின் 'மெர்சல்' படத்தில் நடித்ததை அடுத்து 'விஜய் 62' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்தார் ஜெ. பிரதாப் ரெட்டி 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதால்