என்ன ஒரு கவிதைத்தனமான லிப்கிஸ் முத்தம்.. 'தருணம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,June 18 2023]

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், 'தேஜாவு’ பட புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் விழா சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் நாயகன் அருண் சீனிவாசன் மற்றும் நாயகி ஸ்மிருதி வெங்கட் இருவரும் கவிதைத்தனமான காதல் செய்யும் காட்சியும் இறுதியில் லிப்கிஸ் கொடுக்கும் அழகிய காட்சியும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் உள்ளன. ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த வீடியோ ஒரு அழகிய காதல் கவிதை சொல்லப்போகிறது என்பது தெரிய வருகிறது.

‘தேஜாவு’ என்ற தரமான நல்ல திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் அரவிந்த் சீனிவாசனிடம் இருந்து ஒரு அழகிய காதல் படத்தை எதிர்பார்க்கலாம் என்பது இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது . இந்த படத்தை ஆர்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

'அசுரன்' பட வசனத்தை பேசிய விஜய்.. வெற்றிமாறன் கூறியது என்ன தெரியுமா?

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் நேற்று நடத்திய கல்வி விழாவில் விஜய் பேசிய போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'அசுரன்' படத்தில் இடம்பெற்ற வசனத்தை பேசினார் என்பதை பார்த்தோம். 

எனது படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரகுமான் மறுத்துவிட்டார்: பார்த்திபன் ட்விட்..!

நடிகர், இயக்குனர் பார்த்திபன் தற்போது 'டீன்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க மறுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஹாலிவுட் வாய்ப்புக்காக ஆபாச காட்சிகளில் நடித்தேனா? நடிகை தமன்னா விளக்கம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா நடித்துள்ள வெப் சீரிஸ்களில் அவர் தாறுமாறான ஆபாச காட்சிகளில்

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த விசிக திருமாவளவன்.. இந்த ஒரே காரணம் தான்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடிகர் விஜய்க்கு தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

லுங்கியை இப்படி கூட கட்டலாமா? எம்.எஸ்.பாஸ்கர் மகள் வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் லுங்கி கட்டிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இப்படி கூட லுங்கி கட்டலாமா என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.