ஓவியாவை எனக்கு ஏன் பிடிக்கும்? ஆரவ் சொன்ன அற்புதமான காரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலமாகி தற்போது அதில் பலர் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பிசியாக உள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா, ஜூலி, ஆகியோர் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே காதலர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா. ஆனால் ஓவியாவை தான் காதலிக்கவில்லை என்று ஆரவ் மறுத்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வெளியே வந்த பின்னரும் ஆரவ்வை தான் காதலிப்பதாக கூறினார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் தான் யாரையும் காதலிக்கவில்லை என்று டுவிட்டரில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு லைக்ஸ்கள் குவிந்தன
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் தனக்கு ஓவியாவை அதிகம் பிடிக்கும் என்று கூறிய ஆரவ் அதற்காக ஒரு அற்புதமான காரணத்தையும் கூறியுள்ளார். "இந்த உலகத்திலேயே மிகக் கஷ்டமான விஷயம் நாம் நாமாக இருப்பதுதான். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். "ஆனால், ஓவியா அப்படி இல்லாமல் எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அதனால்தான் அவரை நான் உட்பட எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் ஆர்மி உருவாக்கும் அளவுக்குப் புகழ் பெற்றதற்கும் இதுதான் காரணம்" என்று கூறியுள்ளார் ஆரவ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments