close
Choose your channels

இரவு நேர பார்ட்டியில் நடனம் ஆடிய ஆரவ்: வைரலாகும் வீடியோ 

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ், சமீபத்தில் ‘இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராஹேவை திருமணம் செய்து கொண்டார் என்பதும், சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே 

மேலும் திருமணத்திற்கு பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் முதல் பதிவு செய்த ஆரவ் தனது மனைவியை ’இமைபோல் காப்பேன்’ என்றும் பதிவு செய்து இருந்தது பெரும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆரவ்-ராஹே திருமணத்திற்கு பின்னர் நடந்த இரவு நேர பார்ட்டியின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரவ் குத்தாட்டம் ஆடிய நடனம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் ஆரவ்-ராஹே தம்பதியினர் இணைந்து கேக் வெட்டி திருமணத்தை மகிழ்ச்சியுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கொண்டாடிய வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆரவ்-ராஹே தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment