பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஆரவ்வுக்கு ஓவியா கூறிய பதில்
- IndiaGlitz, [Sunday,April 29 2018]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக ஓவியா ஆர்மியினர்களின் வாழ்த்துக்களால் சமூக வலைத்தளங்களில் ஓவியாவின் பிறந்த நாள் டிரெண்ட் ஆகியுள்ளது.
இந்த நிலையில் ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய ஸ்பெஷல் நாள் போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று ஆரவ் கூறியுள்ளார்.
ஆரவ்வின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட ஓவியா, அவருக்கு 'நன்றி டியர்' என்று பதிலளித்துள்ளார்.