முடிவுக்கு வந்தது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.
Send us your feedback to audioarticles@vaarta.com
'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் மற்றும் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'. இந்த படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகி வருகிறது.
இந்த படத்தை இயக்கிய அனுபவம் குறித்து இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் கூறியபோது, ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments