யாரும் ஓட்டு போடாதீங்க: பொள்ளாச்சி பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் அறந்தாங்கி நிஷா
Send us your feedback to audioarticles@vaarta.com
பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் தங்களுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்த்துவிட்டனர். இந்த நிலையில் தொலைக்காட்சி புகழ் அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியில் மட்டும் இந்த கொடுமை நடக்கவில்லை. தினமும் ஒவ்வொரு பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். பெண் குழந்தைகளை கூட இவர்கள் விடுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொண்டு கொன்றுவிடுவார்கள். இனிமேல் அது மீண்டும் தொடரும். 15 வருடம் கழித்து யாரோ ஒருவன் ந,,அ பெண் குழந்தைகளை கொல்வதைவிட நாமே கொன்றுவிடலாம் என ஒவ்வொரு பெற்றோரையும் நினைக்க வைத்துவிடாதீர்கள்
திருநாவுக்கரசு தாயார் நேற்று பேட்டியளித்தபோது, 'யாரோ ஒரு ஐட்டத்தை கூட்டி வந்து வீடியோ எடுத்து மார்பிங் செய்துள்ளதாக கூறினார். அந்தம்மாவுக்கு அறிவே இல்லையா? ஒரு ஐட்டம் கத்துவதற்கும் அபலைப்பெண் கத்துவதற்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?
பெண் குழந்தைகள் இப்போதுதான் அடுப்படையில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து கல்லூரிக்கும் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களை மீண்டும் அடுப்படிக்கே தள்ளிவிடாதீர்கள்.
இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு அரசு பெரிதாக தண்டனை கொடுத்துவிடாது. இன்னும் தஷ்வந்துக்கு சோறு போட்டுக்கொண்டு இருக்கும் அரசாங்கம், இந்த குற்றவாளிகளை மட்டும் என்ன செய்துவிடும். ஒரே ஒரு ஆறுதல் இந்த குற்றவாளிகளுக்கு வாதாட மாட்டோம் என்று கூறிய வழக்கறிஞர்களுக்கு எனது நன்றிகள்
இதற்கெல்லாம் போராட்டம் செய்து டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம். போராட்டம் செய்வதால் எந்தவித பயனும் இல்லை. நமக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தேர்தல்தான். வரும் தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடாதீங்க. அல்லது எல்லோரும் நோட்டாவுக்கு போடுங்க. அப்ப கேட்பாங்க ஏன் ஓட்டு போடலைன்னு. அப்போ சொல்லுங்க. பெண் குழந்தைகள் மீது தவறாக நடப்பவர்களை கொல்லும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று. அதற்கு சட்டம் இயற்றுங்கள் என்று சொல்வோம். அதன்பின்னராவது குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்று அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments