இணையத்தில் வைரலாகும் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ!
- IndiaGlitz, [Monday,October 12 2020]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக மாற்றி வருகிறார் என்பதும் அவரது டைமிங் ஜோக் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் ரசிக்க வைத்துள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் பிக்பாஸையே கலாய்த்தது கேமராவை பார்த்து புரபோஸ் செய்தது ஆகியவை முதல் இரண்டு நாட்களின் நகைச்சுவை விருந்து என்று சொல்லலாம்
இந்த நிலையில் சமீபத்தில் தனது திருமணநாளை பிக்பாஸ் வீட்டிலேயே அறந்தாங்கி நிஷா கொண்டாடினார் என்பது தெரிந்ததே. கமலஹாசன் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது அவரது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
இந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷாவின் கணவர் ரியாஸ் கூறியபோது ’அறந்தாங்கி நிஷா எனது மாமா பொண்ணு தான் என்றும், சிறுவயதில் இருந்தே அவரை தனக்கு ரொம்ப பிடிக்கும் பேச்சு மற்றும் முயற்சி ஆகிய இரண்டுமே எனக்கு அவரிடம் பிடித்தது என்றும் கூறினார். மேலும் ஒருமுறை அவரிடம் காதலை புரபோஸ் செய்ய சென்றபோது இருட்டில் அவருடைய கையைப் பிடித்து என்னுடைய காதலை தெரிவித்தேன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
View this post on InstagramThrowback !!! Follow @aranthanginisha.offl
A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on Oct 11, 2020 at 11:24pm PDT