ஒரே ஒரு முத்தம்: எல்லோரையும் தேம்பி தேம்பி அழவைத்த அறந்தாங்கி நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு நாட்கள் கலகலப்பான சென்றதற்கு அறந்தாங்கி நிஷாவே முழு காரணம். பிக்பாஸ் முதற்கொண்டு யாரையும் விடாமல் அவர்கள் கலாய்த்த விதம் அனைவரையும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் சுரேஷ்=அனிதா சம்பத், சனம்ஷெட்டி - பாலாஜி, சனம் ஷெட்டி - ரேகா உள்பட ஒருசில சண்டைகள் மற்றும் மொக்கையான டாஸ்குகள் காரணமாக அறந்தாங்கி நிஷா ஓரம் கட்டப் பட்டதாக தெரிகிறது. கடந்த 4 நாட்களாக அறந்தாங்கி நிஷா இருந்த இடமே தெரியாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் தனது திருமண நாளை கொண்டாடிய அறந்தாங்கி நிஷா, இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டினார்கள். இந்த நிலையில்தான் இந்த பிறந்த நாளின் போது தனது அம்மாவை மிஸ் செய்ததாக அழுது கொண்டே அறந்தாங்கி நிஷா கூறினார்

பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் அவருடைய அம்மாவும் மகளும் தோன்றியதை அடுத்து டிவி அருகே சென்று தனது அம்மாவிற்கு முத்தம் கொடுத்தார் அறந்தாங்கி நிஷா. அப்போது அவர் தேம்பித் தேம்பி அழுதது மட்டும் இல்லாமல் சக போட்டியாளர்களையும் அழ வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அனைவரையும் கலகலப்பாக கொண்டு சென்ற அறந்தாங்கி நிஷா இன்று அனைவரையும் அழ வைத்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது

More News

கமல்-ரஜினி நாயகியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: சாய்பல்லவியுடன் பேச்சுவார்த்தை!

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக செய்திகள்

குஷ்புவுடன் பாஜகவில் இணைந்த மேலும் இருவர்: பரபரப்பு தகவல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்று காலை விலகிய நடிகை குஷ்பு சற்று முன்னர் பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்

பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் பல்டி: குஷ்புவை கிண்டல் செய்த பாஜக ஆதரவு நடிகர்!

நடிகை குஷ்பு பாஜகவில் சேர்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திர்கு குஷ்பு சென்றதாகவும் அவர் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஜேபி நட்டாவை

பிக்பாஸ் வீட்டில் நுழையும் அர்ச்சனா: சனம் வெளியேறிய பின்னரா?

கடந்த வாரம் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்ஜே அர்ச்சனாவும் ஒருவர் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த ஞாயிறன்று அறிமுகம் செய்யப்பட்ட

எல்லாருக்கும் ரெண்டு முகம் இருக்கும்: சுரேஷால் ஆரம்பமாகும் அடுத்த சண்டை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரே வாரத்தில் மூன்று நான்கு சண்டைகளை பார்த்துவிட்டோம். குறிப்பாக சுரேஷ்-அனிதாசம்பத், சனம்ஷெட்டி- பாலாஜி முருகதாஸ், சனம்ஷெட்டி-ரேகா