'அரண்மனை 4' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷ்பு வெளியிட்ட புதிய போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,April 19 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம் என்றும் இதே தேதியில் விஷாலின் ’ரத்னம்’ படம் மட்டும் ரிலீஸ் ஆகும் என்றும் நேற்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ’அரண்மனை 4’ படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை வெளியிட்டு அது குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த போஸ்டர் படி ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

’அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு எந்த காரணத்தையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்றாலும் மே 3 என்பது சரியான ரிலீஸ் தேதி என்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார் என்பதும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் பென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ’அரண்மனை’ படத்தின் மற்ற பாகங்கள் போலவே வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கையில் என்ன ஆச்சு? ஓட்டு போட வந்த விஜய்யை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

தளபதி விஜய் சற்றுமுன் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் அவர் கையில் உள்ள காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை.. எப்படி என ஆச்சரியம்..!

குக் வித் கோமாளி சீசன் 5 வரும் 27ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு படம் தான்.. ரூ.100 கோடி வசூல்.. பிஎம்டபிள்யூ கார் வாங்கிய இயக்குனர்.. குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய நிலையில் அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாக தகவல்

தமன்னாவை மிரட்டிய மர்ம நபர்.. போன் உரையாடலில் என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ..!

நடிகை தமன்னா தன்னை ஒருவர் போனில் மிரட்டியதாகவும் ஆனால் தான் சுதாரித்து கொண்டதால் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டதாகவும் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் வாக்களிப்பு.. விஜய் துபாயில் சிக்கி கொண்டாரா?

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பல திரை உலக பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்களித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன..