'அரண்மனை 4' ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பா? சோலோவாக ரிலீஸ் ஆகிறதா விஷாலின் 'ரத்னம்'?

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடித்த ‘ரத்னம்’மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ’அரண்மனை 4’ திரைப்படம் ஒரு வாரம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்ற நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஏப்ரல் 26 ஆம் தேதி ’ரத்னம்’ மற்றும் ’அரண்மனை 4’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் திடீரென ’அரண்மனை 4’ திரைப்படம் மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து விஷாலின் ’ரத்னம்’ படம் மட்டும் ஏப்ரல் 26ஆம் தேதி சோலோவாக ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரிலீஸ் தினத்தன்று தான் ’சந்திரமுகி 2’ ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென ’சந்திரமுகி 2’ ரிலீஸ் தேதி தள்ளி போனதால் ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. அதேபோல் தற்போது ’ரத்னம்’ படம் போட்டியின்றி தனியாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.