டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ப்ளாக்பஸ்டர்  'அரண்மனை 4' .. திரையரங்கில் தவறவிட்டவர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் அரண்மனை 4 திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அரண்மனை 4 திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.

சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார்.

அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு புதுமையான ஹாரர் பயணத்திற்கு அழைத்து சென்ற இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும்
பாராட்டுகளை குவித்து, திரையரங்குகளில் ப்ளாக்பஸ்டர் பெற்றது.

அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டு அரண்மனை 4 படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும் எடுக்க முடியும். திரில்லர் மற்றும் ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உடன், யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, E கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பணிகளை ஃபெனி ஆலிவர் மற்றும் சண்டைக்காட்சிகளை ராஜசேகர் செய்துள்ளார்.

சுந்த சி உடைய வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன், குடும்பத்தோடு பார்த்து மகிழும் இந்த ஹாரர் காமெடி திரைப்படத்தை தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.

 

More News

பிரபல நடிகரின் அலுவலகத்தில் திருட்டு.. திருடு போன திரைப்படங்களின் நெகட்டிவ்கள்..!

பிரபல நடிகரின் அலுவலகத்தில் மர்ம நபர்கள்  நுழைந்து திரைப்பட நெகட்டிவ் உள்பட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் பிறந்த நாளில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட வெங்கட்பிரபு.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

'டிடி ரிட்டர்ன்ஸ் 2' படத்தில் ஆர்யா.. 'கோட்' நடிகை தான் நாயகி.. ஆச்சரிய தகவல்..!

சந்தானம் நடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது.

பிறந்த நாள் கொண்டாட்டம்.. விஜய்யின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது.

கள்ளக்குறிச்சி விசிட் செய்த விஜய்யை கேலி செய்தேனா? அனிதா சம்பத் விளக்கம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று காலை இது குறித்து தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த விஜய், அதன் பின்னர் நேற்று