'அரண்மனை 4' படத்தின் முரட்டு சம்பவம்.. 3 வாரத்தில் சாதனை வசூல்..  2024ன் முதல் வெற்றிப்படமா?

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை வாரி குவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் 3 வாரங்களில் வசூலில் முரட்டு சம்பவம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்து இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மேலும் கிளைமாக்ஸ் அம்மன் பாடலில் குஷ்பு , சிம்ரன் செம்ம டான்ஸ் ஆடியிருந்தனர் என்பதும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

‘அரண்மனை 4’ தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஐந்து நாள் வசூல் 50 கோடி என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி மூன்று வாரங்கள் மட்டுமே ஆகி உள்ள நிலையில் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அரண்மனை’ படத்தின் சீரிஸ்களில் இந்த படம் தான் அதிக வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு பல மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் முதல் சூப்பர் ஹிட் படமாகவும் ‘அரண்மனை 4’கருதப்படுகிறது.

 

More News

மன்னிப்பு கேட்ட பின்னரும் இர்பான் மீது நடவடிக்கையா? மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம்..!

பிரபல யூட்யூபர் இர்பான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் மருத்துவத்துறை பரிந்துரை செய்தது

தனுஷின் 'ராயன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து இப்படி ஒரு பாடலா?

தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூன் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அவ்வபோது நடைபெற்று வருகிறது

தொட்டுப்பார் கை நடுங்கும்.. மூச்சடங்கும் இவனை கண்டு.. 'இந்தியன் 2' சிங்கிள் பாடல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'இந்தியன் 2' படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி

இலங்கையில் ஒரு இன்பச்சுற்றுலா.. டூபீஸ் பிகினியில் 'பேச்சிலர்' நடிகை..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கமல்-ரஜினி பட நடிகை.. 100 ஆண்டுகால நட்பு குறித்து பெருமிதம்..!

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் நாயகியாக நடித்த நடிகை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களை சந்தித்ததோடு இங்கிலாந்துக்கும் தனது நாட்டிற்கும் இ