'அரண்மனைக்குள்ள யாருடா? 'அரண்மனை 3' வீடியோ பாடல்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

’அரண்மனைக்குள்ள யாரு டா’ என்று தொடங்கும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு இயற்றி பாடியுள்ளார். இந்த பாடலின் படமாக்கம் மற்றும் காட்சி அமைப்புகள் அட்டகாசமாக உள்ளதாக பாடலை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்யா மற்றும் ராஷிகண்ணாவின் நடனம், பின்னணியில் உள்ள பிரமாண்டமான அரண்மனை மற்றும் த்ரில் காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சி. சத்யாவின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

ஆர்யா, சுந்தர்சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, மனோபாலா, வேல ராமமூர்த்தி, மதுசூதனன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவும் ஃபென்னி ஒலிஃபர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.