சுந்தர் சியின் 'அரண்மனை' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Monday,September 07 2015]

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து 'அரண்மனை 2' படத்தை அவர் இயக்கி வருகிறார். அரண்மனை படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த படத்தில் அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளதால் கிராபிக்ஸ் பணிகளுக்கு குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. எனவே இந்த படத்தை வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கமாக பேய்ப்படங்களின் உரிமைகளை பெற்று ரிலீஸ் செய்து வரும் பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளனர்.

சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, மனோபாலா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'தனி ஒருவன்' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 'அரண்மனை' திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது போலவே 'அரண்மனை 2' படமும் சூப்பர் ஹிட் ஆகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News