close
Choose your channels

எளிமையாக நடந்தது அரண்மனை 2 ஆடியோ வெளியீடு

Thursday, December 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான 'அரண்மனை 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னையில் மிக எளிமையாக நடைபெற்றது. முதலில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் குஷ்பு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சென்னை மக்கள் துயரத்தில் இருப்பதால் இந்த இசை வெளியீட்டு விழா எளிமையாக நடந்ததாக கூறப்படுகிறது.

சித்தார்த், த்ரிஷா, ஹனிசிகா, பூனம்பாஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, ராதாரவி மற்றும் முக்கிய வேடத்தில் சுந்தர் சி நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment