பிச்சை போட்டவங்களுக்காக பிச்சை எடுக்கறேன்: அறந்தாங்கி நிஷா ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பிரபலமாகி நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரான அறந்தாங்கி அருகே உள்ள கிராமப்பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அந்த மக்களின் அவசர தேவை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து வருகிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அந்த கிராமத்துக்கு சென்று நிவாரண உதவி செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம்
நிஷாவின் நல்ல நோக்கத்தை தவறாக புரிந்து கொண்ட ஒருசிலர், 'நிஷா பிச்சை எடுக்க தொடங்கவிட்டதாக கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்த நிஷா,' ஆம், நான் பிச்சை தான் எடுக்கின்றேன். அதைப்பற்றி எனக்கு சிறிதும் கவலை இல்லை. இத்தனை நாள் தமிழக மக்களுக்கு அரிசி, பருப்பு என பிச்சை போட்டுக்கொண்டிருந்த விவசாயிகளுக்காகத்தான் பிச்சை எடுக்கின்றேன்' என்பது எனக்கு பெருமைதான் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் இந்த பகுதி மக்கள் நிவாரண உதவியைவிட மின்சாரத்தை தான் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்றும், உடனடியாக அதிக ஆட்களை அனுப்பி மின்சாரம் கிடைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com