அறம் திரைவிமர்சனம்

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

மாபெரும் வெற்றி பெற்ற கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கிட்ட கோபி நைனார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து இந்த விறுவிறுப்பான அதே சமயம் யோசிக்க வைக்கும் அறம் படத்தை தந்திருக்கிறார். பொதுவாக கருத்து சொல்லும் படங்களின் இயக்குனர்கள் அதில் மட்டுமே கூறிய கவனம் செலுத்தி திரைக்கதையின் தொய்வை கவனிக்காமல் இருப்பார்கள் ஆனால் கோபியோ தான் சொல்ல வந்த கருத்துக்களையும் ஆணி அடித்தாற்போல் சொல்லி திரைக்கதையையும் அபாரமாக அமைத்து கால தாமதமானாலும் ஒரு பெருமை மிகு வெற்றியை அடைந்திருக்கிறார். 

படம் ஆரம்பிக்கும்போது பனி நீக்கம் செய்யப்பட்ட கலெக்டர் நயன்தாரா மீது உயர் அதிகாரி கிட்டி விசாரணை நடத்த பிளாஷ் பாக்கில் அதற்கு காரணம் என்ன என்பது காட்சிகளாக விரிகின்றன. ராக்கெட் நகரம் ஸ்ரீ ஹரி கோட்டாவுக்கு  அருகில் இருக்கும் வறண்ட பூமியில் வாழும் ராம்ஸ் மற்றும் அவர் மனைவி சுனு லட்சுமி மற்றும் விடலை மகன் காக்க முட்டை விக்னேஷ் ஐந்து வயது மகள் தன்ஷிகா. தங்கள் கனவுகளை புதைத்து விட்டு அன்றாடம் தண்ணீருக்காக பல மயில்கள் செல்லும் இந்த மக்களின் தண்ணீர் குறையை தீர்த்து வைப்பேன் என்று முயற்சியில் இறங்குகிறார் கலெக்டர். எதிர்பாராத விதமாக குழந்தை தன்ஷிகா போர் தண்ணீருக்காக தோண்டப்பட்டிருக்கும் நூற்றி நாற்பத்தாறு அடி ஆழமுள்ள ஒரு குறுகிய குழிக்குள் விழுந்து விட அவளை உயிரோடு கலெக்டர் காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதே மீதி கதை. 

மதுவந்தினீ என்கிற கலெக்டர் வேடத்தில் மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார் நயன்தாரா. அரசாங்கத்துக்கு எதிராக அவர் பேசும் ஒவ்வொரு பஞ்ச் வசனத்திற்கும் பெரிய ஹீரோக்களுக்கு இணையாக விசில் மற்றும் காய் தேடல்கள் பறக்கிறது தியேட்டரில். இந்த ரோலை நயனை விட்டால் வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்று சொல்வதை விட நயன் இதில் நடித்ததனால்தான் நல்ல படம் பல லட்சம் மக்களை சென்று சேரப்போகிறது என்பதால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் சலூட் வைப்பது நம் கடமை. சதுரங்க வேட்டை ஜிகித்தாண்ட போன்ற அநேக படங்களில் ரௌடுயாகவும் கொலைகாரனாகவும் நடித்த ராம்ஸ் இதில் ஒரு முரட்டுத்தனமான ஆனால் அதே சமயம் குடும்பத்து மீது பாசம் வைத்திருக்கும் தந்தையாக வந்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரை போலவே மிக இளம் வயது சுனு லட்சுமி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வந்து அசத்துகிறார். ஆரம்பத்தில் தன் மகன் நீச்சல் திறமையை பார்த்து பெருமை பட்டு அவனை கணவனை மீறி ஊக்க படுத்துவதாகட்டும் குழந்தைக்கு நேரிடும் பயங்கரத்தை கண்டு உடைந்து விழுவதலியாகட்டும் மனதில் ஆழமாக பதிகிறார். ஒரு பெரிய ரவுண்டு வர வாழ்த்துவோம். விஜய் தி வி அது இது எது நிகழ்ச்சியில் காமடி பண்ணும் பழனி பட்டாளம் இதில் மக்களின் குரலாக வந்து ஆங்காங்கே அரங்கை அதிரவைக்கிறார் குழந்தையாயி காப்பாற்ற நேரமாகும் பொது கண்ணீர் விடுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். காக்க முட்டை ரமேஷ் விக்னேஷ் தீயணைப்பு படை அதிகாரியாக வரும் முத்துராமன் அரசியல்வாதியாக வரும் ராமா வேலப்பன் கிட்டி என எல்லா நடிகர்களும் அவர்கள் பங்கை மிக சரியாக செய்திருக்கிறார்கள். 

குழந்தை குழிக்குள் விழுவதும் அவளை காப்பாற்றுவதும்தான் பிரதான கதையாக இருந்தாலும் கூட படம் நெடுக்க பல கருத்துக்களையும் அதிகாரத்த்தின் போக்கின்மீது சாட்டையடியும் கொடுத்து கவர்கிறது படம். பாரதத்தின் கடை கோடி கிராமங்கள் புறக்கணிக்க படுவது தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் மீதான போக்காக செயல்படுவோரால் ஏற்படும் உயிரிழப்புகள் போன்ற சமூக பிரச்சினைகளையும் அதே சமயம் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் கனவுகளை புதைத்து அன்றாட வாழ்க்கை வாழும் தனி மனித வாழ்வியலையும் சொல்லிய விதத்தில் ஈர்க்கிறது ஆறாம். ஒரு பக்கம் பல ஆயிரம் கோடி ருபாய் செலவில் ராக்கெட் விட தயாராகிக்கொண்டிருப்பதும் அதற்கு கொஞ்சம் தள்ளி ஒரு உயிரை காப்பாற்ற வரும் அரசாங்க ஆட்களிடம் கயிறை தவிர வேறு கருவிகள் இல்லாமல் இருக்கும் அவலத்தை ஒப்பிட்டு காட்சி படுத்திய விதத்தில் டைரக்டர் தனித்து தெரிகிறார். 

குறை என்று பார்த்தால் எதார்த்தமாக செல்லும் கதையில் நயன்தாராவுக்கு மாஸ் ஷாட்கள் வைத்தது உறுத்துகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை லேசாக தொய்வடைவதையும் மறுப்பதற்கில்லை. துருத்தி நிற்கும் ஒரு கேள்வி ஒரு கலெக்டர் இன்னொரு குழந்தையின் உயிரை பணயம் வைக்க முற்படுவது உண்மையில் நியாயமானதாக என்பதே. 

கிகிப்ரானின் இசை ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் எடிட்டிங் அனைத்துமே முதல் தரம். கோபி நைனார் நாம் முன்னர் சொன்னது போலவே தான் சொல்ல வந்த உயரிய கருத்துக்களை ஒரு விறு விருப்பன திரைக்கதை மூலம் சொல்லிய விதத்தில் தான் ஒரு முக்கியமான படைப்பாளி என்பதை உரக்க அறிவித்திருக்கிறார் இந்த அறம் மூலம். 

அறம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய உயர் தரமான படைப்பு 

மதிப்பெண் : 3.5 / 5.0

More News

'மெர்சல்' இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது

'அறம்' போன்ற படங்களுக்கு ஊக்கம் கொடுங்கள்: நடிகை ரேவதி கோரிக்கை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தாவுடன் கமல் இன்று சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வருகிறார். இதற்காக அவர் முக்கிய அரசியல்வாதிகளையும் பிற மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

பிரபல கவர்ச்சி நடிகையின் தாயார் காலமானார்

குசேலன்', 'குரு என் ஆளு', 'ஒன்பதுல குரு' உள்பட பல படங்களில் நடித்தவரும், 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தவர் நடிகை சோனா. இவருடைய தாயார் இன்று அதிகாலை காலமானார்.

'மெர்சலுக்கு' அடுத்து தினகரனை விளம்பரம் செய்கிறது மத்திய அரசு: மயில்சாமி

தற்போது மத்திய அரசே அனைத்து விஷயங்களையும் தானே விளம்பரம் செய்து வருவதாகவும், மெர்சல் விஜய்யை இந்தியா முழுவதும் விளம்பரம் செய்தது போல்