close
Choose your channels

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, October 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு காரணமாக அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் விஜய்யின் 'மெர்சல்' படத்துடன் தீபாவளி தினத்தில் 'அறம்' வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'மெர்சல்' பரபரப்பு முடிந்த இரண்டு வாரம் கழித்து அதாவது நவம்பர் 3ஆம் தேதி 'அறம்' ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

நயன்தாரா முதன்முதலாக கலெக்டராக நடித்துள்ள இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment