அறம் வெற்றியை தொடர்ந்து 'அறம் 2' உருவாகிறதா?

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அறம்' திரைப்படம் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படமாகிய நிலையில் நயன்தாராவே நேரில் தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்ததால் பிரமாண்டமான  வசூலை பெற்றுள்ளது. வார இறுதிநாட்களில் சென்னையில் மட்டுமே ரூ.1 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ள இந்த படம் தமிழகம் முழுவதும் திருப்தியான வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'அறம்' வெற்றியை அடுத்து 'அறம் 2' படத்தை தயாரிக்கும் திட்டம் உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் K.ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 'அறம் 2' திரைப்படம் முதல் பாகத்தை விட வலிமையான ஒரு சமூக செய்தியை தெரிவிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் 'அறம்' 2' குறித்த ஐடியா தனக்கு இப்போது வரை இல்லை என்று இயக்குனர் கோபிநயினார் தெரிவித்துள்ளார். இதனால் 'அறம் 2' திரைப்படம் வேறு இயக்குனர் இயக்கத்தில் வெளிவருமா? என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

More News

தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாகிஸ்தான் பாடகர்

தமிழ் திரையுலகில் தயாராகும் திரைப்படங்கள் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் ஹாலிவுட் கலைஞர்கள் தமிழ் படங்களில் பணிபுரிவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

இதுதான் நமீதாவின் திருமண அழைப்பிதழ்

பிரபல நடிகையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான நடிகை நமீதா தனது நீண்ட நாள் காதலரும், நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

கெளதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அப்டேட்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த 'ஹரஹர மகாதேவகி' படத்தின் வெற்றிக்கு பின்னர் அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'

10 ஆண்டுகளுக்கு பின்னர் 'குணா' குகையை மீண்டும் திறக்க ஏற்பாடு

கடந்த 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'குணா' படத்தில் 'கண்மணி அன்போடு' என்ற பாடல் காட்சி இடம்பெற்ற இடத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

இசையரசி பி.சுசீலா பிறந்த நாள் ஸ்பெஷல்.

தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.