தந்தைக்கு நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஏ.ஆர்.அமீன்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் இன்று காலை முதல் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனும் பாடகருமான ஏ.ஆர்.அமீன் இன்று தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தைக்கு நெகிழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'அன்புள்ள தந்தையே! இன்றைய உங்கள் பிறந்த நாளில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள்தான் என்னுடைய உண்மையான நண்பர், ஆசிரியர் மற்றும் உத்வேகத்தை தூண்டும் அனைத்தூமாக உள்ளீர்கள்' என்று தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.அமீனின் இந்த ஒரே ஒரு டுவீட் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'ஓகே கண்மணி', சச்சின், மற்றும் சமீபத்தில் வெளியான '2.0' ஆகிய படங்களில் ஏ.ஆர்.அமீன் ஒருசில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear daddy, on your birthday, I want you to know that you are truly an inspiration, a friend and a teacher to all of us. pic.twitter.com/WghyxHuPby
— A.R.Ameen (@arrameen) January 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments