ரஜினி, கமலை அடுத்து அரசியலுக்கு வருகிறாரா அஜித்?

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலம் ஆகிய இரண்டும் தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த வெற்றிடத்தை நிரப்ப கோலிவுட்டில் இருந்து ரஜினி, கமல் ஆகிய இருவரும் களமிறங்கிவிட்டார்கள். இதோடு நிற்காமல் இன்னும் பலர் அரசியல் கனவிலும் முதல்வர் நாற்காலி கனவிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தையும் அரசியலுக்கு இழுக்கும் முயற்சி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ஆனால் அஜித் களமிறங்கவுள்ளது நிஜ அரசியல் இல்லை, சினிமா அரசியல் என்பது குறிப்பிடத்தக்கது.

'விசுவாசம்' படத்திற்கு பின்னர் அஜித், பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது அல்லவா! இந்த படம் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாம். அறம் தயாரிப்பாளர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் பரபரப்பான அரசியல் படம் என்றும் இந்த படத்திற்கு 'அறம்' இயக்குனர் கோபி நயினார் வசனம் எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'அறம்' திரைப்படத்தில் கோபியின் வசனத்தில் தீப்பொறி பறந்தது என்பது தெரிந்தது, இந்த நிலையில் அஜித்தின் அரசியல் படத்தில் அவர் எழுதப்போகும் வசனம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

திருமணத்திற்கு பின் ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி

திருமணத்திற்கு முன் ஜோடியாக நடித்த நட்சத்திர ஜோடிகள் திருமணத்திற்கு பின் நடிப்பது அரிதாகவே இருந்து வருகிறது. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, உள்பட பலர் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடிக்கவில்லை

கமல், ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா? கவுதமி கருத்து

இன்று உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து நடிகை கவுதமி சற்று முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சிறையில் சசிகலாவுக்கு சலுகை தரச்சொன்னது யார்? டிஜிபி அதிர்ச்சி தகவல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

பெரியார் சிலை பிரச்சனை: கருத்தில் முரண்பட்ட கமல்-ரஜினி

பெரியார் சிலை குறித்து கருத்தை பதிவு செய்த எச்.ராஜா, அதன் பின்னர் அந்த கருத்து தன்னுடைய கவனத்திற்கு வராமல் அட்மின் பதிவு செய்த கருத்து என்றும், அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

பெரியார் சிலை விவகாரம்: குரல் கொடுத்தார் ரஜினி

கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை விவகாரம் குறித்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றன.