'அரபிக்குத்து' பாடலை பாடியவரே டான்ஸ் ஆடிவிட்டார்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பது இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலாகி என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த பாடலுக்கு பிரபல நடிகை சமந்தா உள்பட பல பிரபல நடிகைகளும் சின்னத்திரை நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடியுள்ள நிலையில் பாடகி ஜொனிதா காந்தியும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தற்போது அவர் துபாயில் இருப்பதாகவும் இந்த பாடலை நீங்கள் ரசிப்பீர்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ’அரபிக்குத்து’ பாடலை பாடிய ஜொனிதா காந்தியே ’அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடியதை அடுத்து இந்த வீடியோவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.