'அரபிக்குத்து' பாடல் ஹிட்டானதால் நயன்தாராவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் வெளியாகி மூன்று நாட்கள் ஆன பின்னரும் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடல் சூப்பர்ஹிட் ஆனதால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு செம அதிர்ஷ்டம் அடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
’அரபிக்குத்து’ என்ற பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடி இருந்தனர் என்பதும் இந்த பாடலின் வீடியோவில் ஜொனிதா காந்தி செம க்யூட்டாக நடனமாடி இருந்தார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து ஜொனிதா காந்தி மிகவும் அழகாக இருப்பதால் அவர் நாயகியாகவே நடிக்கலாமே என்று பல நெட்டிசன்கள் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் அவர் ஒரு திரைப்படத்தில் நாயகியாக ஏற்கனவே நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற படத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் நாயகனாகவும் ஜொனிதா காந்தி நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சஹாரின் தங்கை மால்தி சாஹர் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலும் ’அரபிக்குத்து’ பாடல் ஹிட்டானதை அடுத்து ஜொனிதா காந்தி ஹீரோயினாக நடித்துவரும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளரான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு செம லக் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com