அறம்: ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை பெற்ற முதல் படம்

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கலெக்டராக நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி எதிர்பார்த்தைவிட மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. ஊடகங்கள், இணையதள விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் பாராட்டுக்கள் காரணமாக இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 18 திரையரங்குகளில் 191 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,02,81,259 வசூல் செய்துள்ளது. அடாத மழையிலும் திரையரங்குகளில் 87% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாராவின் தியேட்டர்கள் விசிட் மேலும் ரசிகர்களுக்கு ஊக்கமளித்ததால் இந்த படத்திற்கு பார்வையாளர்கள் குவிந்தனர்

இதுவரை மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னையில் ரூ.1 கோடிக்கும் மேல் ஓப்பனிங் வசூல் பெற்று வந்த நிலையில் முதல்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்று ரூ.1 கோடிக்கும் வசூல் செய்துள்ள படம் என்ற பெருமை 'அறம்' படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த வசூலின் மூலம் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நயன்தாரா, உறுதி செய்துள்ளார்.

More News

ஈரான் - ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: 67 பேர் பலி

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 67 பேர் பலியாகியுள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசனுக்கு என்னுடைய சப்போர்ட் எப்போதும் உண்டு: பிக்பாஸ் பிரபலம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான பரணி, மற்ற பங்கேற்பாளர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இடையிலேயே வெளியேறிவிட்டாலும் அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது

வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்:

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.

மீண்டும் வருவேன். நம்புங்கள்: சிம்பு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

சிம்பு பாடிய பணமதிப்பிழப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: கலெக்டர்கள் உத்தரவு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.