'அறம்' இயக்குநர் கோபி நயினார் அடுத்த பட அறிவிப்பு.. ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்..!

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அறம்’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘தளபதி 68’ படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, கோபி நயினார் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'கருப்பர் நகரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர் என்பதும் ஜேடி சக்கரவர்த்தி இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களில் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’கருப்பர் நகரம்’ என்ற டைட்டிலில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் கோபி நயினார் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் செய்யப்பட்டதை அடுத்து அதன் பிறகு தான் நயன்தாரா நடித்த ’அறம்’ திரைப்படத்தை இயக்கினார். தற்போது 'கருப்பர் நகரம்' என்ற டைட்டிலிலேயே மீண்டும் ஒரு படத்தை இயக்குனர் கோபி நயினார் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் மாஸ் பதிவு.. இணையத்தில் வைரல்..!

நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவனாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது

வெளியில என்ன பேசுறாங்கன்னு கரெக்டா ஊகித்த தினேஷ்.. மாயா கேங்கிற்கு ஆப்பு?

 மாயா கேங்கில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக அராஜகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கேங்கில் உள்ளவர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும்

மணிரத்னம் ஆயிரம் கேட்பாரு, குடுக்க முடியுமா? கமல்ஹாசனிடம் பார்த்திபன்..!

மணிரத்னம் ஆயிரம் கேட்பார் கொடுக்க முடியுமா? உங்களிடம் இருக்கிறது கொடுக்குறீங்க' என்று நகைச்சுவைடன் கமல்ஹாசன் உடன் பேசியதை நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்

சூப்பர் ஹிட் படத்தின் 2 ஆம் பாகத்தில் அனுஷ்கா? 50 வது படமாக அமையுமா?

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா தனது 50வது படமாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் சாலை விபத்தில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாலை விபத்தில் மரணமடைந்த தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.