'அறம்' இயக்குநர் கோபி நயினார் அடுத்த பட அறிவிப்பு.. ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அறம்’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘தளபதி 68’ படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, கோபி நயினார் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'கருப்பர் நகரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர் என்பதும் ஜேடி சக்கரவர்த்தி இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களில் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’கருப்பர் நகரம்’ என்ற டைட்டிலில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் கோபி நயினார் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் செய்யப்பட்டதை அடுத்து அதன் பிறகு தான் நயன்தாரா நடித்த ’அறம்’ திரைப்படத்தை இயக்கினார். தற்போது 'கருப்பர் நகரம்' என்ற டைட்டிலிலேயே மீண்டும் ஒரு படத்தை இயக்குனர் கோபி நயினார் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to release #GopiNainar 's next flick title #KarupparNagaram starring my Thambi @Actor_Jai @aishu_dil #JDChakravarthy. Best wishes to the whole Team 🎉
— venkat prabhu (@vp_offl) November 7, 2023
Prod by R Ramesh's @RrFilmmakers & Hemant Raj 's #AGL @ThenandalFilms @venkate25571670 #EswariRao #JohnVijay… pic.twitter.com/MF2kqxPPfI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com