நயன்தாரா மாதிரி கலெக்டர் ஆவேன்: 'அறம்' பேபி மகாலட்சுமி

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]


கோபி நயினார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'அறம்' திரைப்படத்தில் நயன்தாராவை அடுத்து அனைவரையும் கவர்ந்தவர் பேபி மகாலட்சுமி. தன்ஷிகா கேரக்டருக்கு உயிர் கொடுத்தார் என்றே சொல்லலாம்.

கூலி வேலை செய்யும் மாணிக்கம் என்பவரின் மகளான மகாலட்சுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாயார் பாக்கியலட்சுமியின் உறவினர் ஒருவரின் உதவியால்தான் இயக்குனர் கோபியின் அறிமுகம் கிடைத்து பின்னர் தன்ஷிகா கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதலில் குழிக்குள் இறங்க மகாலட்சுமி ரொம்பவே பயந்தாராம். இயக்குனரும், நயன்தாராவும் கொடுத்த தைரியத்தில் தான் நடித்ததாக கூறும் மகாலட்சுமி, இந்த படம் வெளிவந்த பின்னர் பள்ளியில் சக மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் தன்னுடைய நடிப்பை பாராட்டியதையும், தன்னுடன் செல்பி எடுத்ததையும் பெருமையாக கூறுகிறார். மேலும் நல்லா படிச்சு நயன்தாரா மாதிரியே கலெக்டர் ஆகவேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று மழலைச்சொல் மாறாமல் கூறினார் மகாலட்சுமி