உலகிலேயே தலைசிறந்த மனிதர் ஏ.ஆர்.ரஹ்மான்.. அவரை பிரிவதற்கு இதுதான் காரணம்: சாய்ரா பானு..
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே தலைசிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம் என சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகிய இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இவர்களது பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை அடுத்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ள ஏ ஆர் ரஹ்மான் அவதூறு கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு வெளியிட்டுள்ள ஆடியோவில் தனது கணவரை தான் பிரிவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடைசி இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றேன். எனது உடல்நிலை யாருக்கும் பிரச்சனையாக மாறக்கூடாது. மேலும், எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்ளும் பணிகள் பாதிக்கப்படாதிருக்க வேண்டும் என்பதற்காக, பிரிந்து வாழ முடிவு எடுத்தேன்.
எங்கள் பிரிவைப் பற்றி யாரும் தவறான அல்லது கீழ்த்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே தலைசிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிக இடைவெளி தேவைப்பட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன். இவ்வாறு சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com