விரைவில் வெளியாகவுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்ச்சி பாடல்!

திரையுலகில் பிஸியாக இருக்கும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் அவ்வப்போது தனி பாடல்களையும் கம்போஸ் செய்து வெளியிடுவார் என்பதும் அந்த பாடல்கள் திரையிசை பாடல்களை விட சூப்பர்ஹிட்டாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ ஆர் ரகுமான் மீண்டும் ஒரு தனிப்பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாகவும், அந்த பாடலை விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்

உலக மக்களின் இன்றைய கட்டாய தேவையான தண்ணீர் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு பாடலை இயற்றி உள்ளதாகவும் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள அந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவிலான இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பாடலை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மக்களவை வரை சென்ற ரஜினி-விஜய் விவகாரம்

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் கொண்டிருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினி மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் பெற்றது

உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.7,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்..! மத்திய பட்ஜெட்.

தமிழக இரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்கிற துரோகம் என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

உலகக்கோப்பையை வென்ற வங்கதேச அணிக்கு ஐசிசி கண்டனம்

நேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

மன அழுத்தம்.. 29 பேரை கொன்று பலரை பணயக்கைதியாக வைத்திருந்த, ஒரு ராணுவ வீரர்..!

தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

டிவி பார்ப்பவர்களுக்கும் புத்தகம் வாசிப்பவர்களுக்கும் என்ன வேறுபாடு???

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது என்கிறார் பிளாட்டோ.