2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.. ஏஆர். ரஹ்மானின் எச்சரிக்கை நோட்டீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,November 23 2024]

தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிடும் சமூக வலைதள பயனர்கள் மற்றும் யூடியூபர்கள் மீது இரண்டு ஆண்டு தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானு என்பவரை பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் இதை வைத்து ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த பிரிவு குறித்து பலரும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரிவுக்கான கற்பனை காரணத்தை கூறி பல்வேறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், ஏ.ஆர். ரஹ்மான் தற்போது அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த நோட்டீஸில், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் பதிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படியான அவதூறு வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்; இல்லையெனில், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்

More News

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு மரியாதை.. பனையூர் அலுவலகத்தில் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை நேரில் அழைத்து மரியாதை

ஏ.ஆர்.ரஹ்மானுடன் வதந்தி.. இன்ஸ்டாகிராமில் மோகினி டே அதிரடி பதிவு..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன்  இணைத்து பாடகி மோகினி டே என்பவரை சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அதிரடியாக பதிலளித்துள்ளார்.

'சூர்யா 44' படத்தின் புரமோஷன், ரிலீஸ் தேதிகள் என்ன? கார்த்திக் சுப்புராஜ் அப்டேட்..!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன்

முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள் தெரியுமா உங்களுக்கு ?

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் P.N. பரசுராமன் அவர்கள், முருகனுக்கு இரண்டு மனைவிகள் என்ற பொதுவான நம்பிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் தனது பேட்டியில்,

பகழி கூத்தர் மற்றும் முருகனின் அற்புத திருவிளையாடல்

பக்தி பாடகர் P.N. பரசுராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், பகழி கூத்தர் மற்றும் முருகன் தொடர்பான ஒரு அற்புதமான கதையை பகிர்ந்துள்ளார்.