இசைப்புயலை அவமதித்த சேஷாத்ரி பள்ளி...! இணையத்தில் வைரலாகும் காணொளி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் அவமதித்ததாக, இணையத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
உலகளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இருந்து வருகிறார். தந்தையின் இறப்பிற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறியவர், திலீப் குமார் என்ற தனது இயற்பெயரை ரஹ்மான் என மாற்றிக்கொண்டார். கடந்த 1992-இல் மணிரத்னம் அவர்களின் ரோஜா படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைத்த முதல் படத்திலே தேசிய விருதை தட்டிச்சென்றார். இதன் பின் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்து மிக பிரபலமானார். ஹிந்தியில் முதன் முதலாக இசையமைத்தது, இயக்குனர் ராம் கோபால் வர்மா-வின் ரங்கீலா திரைப்படம் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் மற்றும் சீன மொழியிலும், 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்
தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள், மாநில அரசுகளின் விருதுகள், பத்ம விருதுகள், ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா, கிராமி விருதுகள், வோர்ல்டு சவுண்ட் ட்ராக் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்று குவித்து, விருதுகளின் அருங்காட்சியகமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரஹ்மான் அவர்களின் நேர்க்காணல் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டி ஒன்றில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ள ரஹ்மான் அதில் கூறியிருப்பதாவது,"தந்தையின் இறப்பிற்கு பிறகு நானும், என் தாயும் பள்ளிக்கு சென்றோம். அப்போது என்தாயிடம் பள்ளி நிர்வாகத்தினர் தரக்குறைவாக பேசினார்கள். உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் சென்று தெருதெருவாக அலைந்து, பாட வைத்தீர்கள் என்றால், யாரவது பணம் கொடுப்பார்கள்" என்ற பிரபல பள்ளி நிர்வாகமே அவமானமாக பேசியதாக கண்ணில் வருத்தத்துடன், உதட்டில் புன்னகையுடன் பேசியுள்ளார் ரஹ்மான்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் நடிகை சுஹாசினி, ரஹ்மானை பேட்டியெடுக்கிறார். அப்போது பிஎஸ்பிபி பள்ளியின் அனுபவம் குறித்த கேள்விகளை அவர் கேட்கிறார். அப்போது பதில் கூறிய ரஹ்மான் அவர்கள் "அப்பள்ளியிலிருந்து பாதியிலே நின்று விட்டேன். நல்ல மற்றும் கெட்ட அனுபவங்கள் அப்பள்ளியில் எனக்கு இருந்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் அசைவ உணவு உண்பவர் என்பதற்காக, சாதி ரீதியான துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறுகிறார். ஆனால் அந்த பேட்டியில் தான் படித்த பள்ளி குறித்து ரஹ்மான் பாசிடிவான கருத்துக்களை கூறவில்லை. இதற்கு காரணம் சேஷாத்ரி பள்ளியில் படிப்பதற்கு பிராமணர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், பிற சாதியினர் எளிதில் சென்று அங்கு பாடம் பயில முடியாது என்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
#ARRahman ???? pic.twitter.com/ULV4YjwPur
— JD (@mastervijay2020) May 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com