AI மூலமாக மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏஆர் ரஹ்மான்: 'லால் சலாம்' படத்தில் ஒரு ஆச்சரியம்..!

  • IndiaGlitz, [Saturday,January 27 2024]

செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் கூட மறைந்த தலைவர்களின் உருவங்கள் மற்றும் குரல்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மறைந்த பாடகர்களின் குரலுக்கு உயிர் கொடுத்து ’லால் சலாம்’ திரைப்படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் பாடல்களை கம்போஸ் செய்து இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழம்பெரும் பாடகர்கள் தற்கால பாடல்களை பாடுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த முயற்சியை ஏஆர் ரகுமான் லாரன்ஸ் ’லால் சலாம்’ படத்திற்கு முதல் முதலாக பயன்படுத்தி உள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு காலமான பாடகர் ஷாகுல் ஹமீத் மற்றும் 2022 ஆம் ஆண்டு காலமான பம்பா பாக்கியா ஆகிய இருவரது குரல்களை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி ’திமிறி எழுடா’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த பாடலை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இதேபோன்று பல மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More News

'அயலான்' தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் ஒரு பக்கம் ரூ.75 கோடிக்கு மேல் வசூலை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ்

விஜய் எனக்கு போட்டியா?  'கழுகு காக்கா கதைக்கு விளக்கம் கொடுத்த ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவின் போது காக்கா கழுகு கதை சொன்ன நிலையில் அதற்கு பதிலடியாக விஜய் 'லியோ' படத்தின் வெற்றி விழாவில்

எனது அப்பா ஒரு சங்கியா? 'லால் சலாம்' விழாவில் ஆவேசமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதை அடுத்து சமூக வலைதளங்களில் அவரை சங்கி என்று தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நேற்று நடந்த 'லால் சலாம்' இசை

முதல் நாளை விட 2வது நாளில் அதிகம்.. வசூலை குவிக்கும் 'சிங்கப்பூர் சலூன்'

ஆர்ஜே பாலாஜி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து  முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகமாக

பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்லும் புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யின் அடுத்த கட்ட திட்டம்..!

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியே வந்துள்ளதை அடுத்து விஜய்யின் அடுத்த திட்டம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.