'மாமன்னன்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்.. வடிவேலு ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Wednesday,May 17 2023]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

’மாமன்னன்’ திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த ஒரு பாடலை இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அடுத்த வடிவேலு பாடியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வடிவேலு பாடிய அந்த பாடல் மே 19ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வடிவேலு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. ஜூன் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மாரி செல்வராஜின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.