இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஒரே வரியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய ஆறுதல்

  • IndiaGlitz, [Saturday,September 07 2019]

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மிக அருகே அதாவது 2.1 கிமீ தூரம் சென்ற நிலையில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பிரதமர் மோடி உள்பட இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதலும், அவர்களுடைய சேவைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பையும் கடுமையான முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ‘இஸ்ரோ விஞ்ஞானிகளே! நாங்கள் எல்லோரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம்’ என்று ஒரே வரியில் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த டுவீட்டை பதிவு செய்து ஒருசில நிமிடங்கள்தான் ஆகியுள்ளது. அதற்கு சுமார் 8 ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் அஜித், விஜய் ரசிகர்கள்

பொதுவாக சமூக வலைத்தளத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைத்தான் இதுவரை பார்த்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் இருவரது ரசிகர்களும்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், முகின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். 

நிறைமாத கர்ப்பத்துடன் காதலர் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை!

நடிகை எமிஜாக்சன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் இந்த மாதம் அவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது

யார் உண்மையான பச்சோந்தி? வெளிச்சம் போட்டு காட்டிய கமல்? 

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களாகிய 16 பேர்களில் ஒருவரை பற்றி ஒருவர் பின்னால் பேசாமல் இருந்ததாக வரலாறே இல்லை. வெளியில் என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்கு

இந்தியாவின் பெருமையை உயர்த்திய விவசாயி மகன்: இஸ்ரோ சிவன் குறித்து பிரபல நடிகை

இஸ்ரோவின் தலைவரும் தமிழருமான சிவன் அவர்கள் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2, இன்று அதிகாலை நிலவை நெருங்கிய