இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஒரே வரியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய ஆறுதல்
- IndiaGlitz, [Saturday,September 07 2019]
இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், நிலவின் மிக அருகே அதாவது 2.1 கிமீ தூரம் சென்ற நிலையில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பிரதமர் மோடி உள்பட இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதலும், அவர்களுடைய சேவைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பையும் கடுமையான முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ‘இஸ்ரோ விஞ்ஞானிகளே! நாங்கள் எல்லோரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம்’ என்று ஒரே வரியில் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த டுவீட்டை பதிவு செய்து ஒருசில நிமிடங்கள்தான் ஆகியுள்ளது. அதற்கு சுமார் 8 ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
All of us are with you #ISRO. #IndiawithISRO #ProudOfISRO ????
— A.R.Rahman (@arrahman) September 7, 2019