சுஷாந்த்சிங்கின் கடைசி படம்: ரசிகர்களின் கோரிக்கையை முன்மொழிந்த ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவு பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது தெரிந்ததே. அவரது மறைவை இன்னும் கூட சில பாலிவுட் பிரபலங்கள் நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் சுஷாந்த்சிங் நடித்த திரைப்படமான ’டிரைவ்’ நெட்ப்ளிக்ஸ்-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
மேலும் அவர் நடத்தி முடித்துள்ள ’Dil Bechara’ என்ற திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. இந்த படம் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சஞ்சனா சிங் நாயகியாக நடித்துள்ளார். முகேஷ் சாப்ரா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் தற்போது சுஷாந்த்சிங் மறைவு காரணமாக அவருடைய கடைசி படமான ’Dil Bechara’ படத்தை முதலில் பெரிய திரையில் மட்டுமே வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்த ஹாஷ்டாக் ஒன்று டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் சுஷாந்த்சிங் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கு ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சுஷாந்த்சிங் நடித்த கடைசி திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் விரும்புவதாகவும் அது குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது என்றும் ஏஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். Dil Bechara திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
Fans Wish to See Sushant Singh Rajput's Last Film in Theaters, #DilBecharaOnBigScreen Trends https://t.co/r4fxRVZyyS
— A.R.Rahman (@arrahman) June 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com