சென்னை இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம்: ஏ.ஆர் ரஹ்மான் முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் நேற்று இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சிக்கு அளவுக்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 5000 ரூபாய் வரை டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பியதாகவும் கூறப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பார்க்கிங் வசதி உட்பட சரியான வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் உள்ளே நுழைவதற்கு இடமே இல்லை என்பதால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்களும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: அன்புள்ள சென்னை மக்களே.. உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிஷ்டமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். உங்கள் குறைகளையும் பகிர்ந்து கொள்ளவும், எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments