மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணி: ஏஆர் ரஹ்மான் இரங்கல்..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை காலமான நிலையில் அவரது மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். அதேபோல் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் பவதாரணி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: பவதாரிணி மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் பவதாரிணியின் உடலை பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்துள்ளனர்

சற்றுமுன் வெளியான தகவலின்படி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.