மிகப்பெரிய இழப்பு.. மறைந்த நடிகர் விவேக் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு..!
- IndiaGlitz, [Tuesday,March 14 2023]
நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பயனாளி ஒருவர் விஜயகாந்த் மற்றும் விவேக் காட்சி ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில் அதில் தமிழின் பெருமை மற்றும் தமிழின் முக்கியத்துவம் குறித்து விஜயகாந்த் கூற அதனை காமெடியுடன் விவேக் கேட்டுக் கொண்டிருப்பார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஏஆர் ரகுமான் மிகப்பெரிய திறமைசாலியான நடிகர் விவேக் அவர்களை மிஸ் செய்கிறோம், திரை உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். ஏஆர் ரகுமானின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் விஜயகாந்த் தமிழ் என்பது கண் போல, ஆங்கிலம் என்பது கண்ணாடி போல, நாம் கண்களை தான் பயன்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் மட்டுமே கண்ணாடியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பார்.
உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழன் தமிழில் பேச வேண்டும் என்பதை விஜயகாந்த் இந்த காட்சியின் மூலம் வலியுறுத்தி இருந்த நிலையில் ஆஸ்கார் விருதை பெற்றவுடன் ஏஆர் ரகுமான் ’எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் தனது நன்றியை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Missing comedy legend Vivek ..What a great loss 😢 https://t.co/RO4yPIGszB
— A.R.Rahman (@arrahman) March 13, 2023