கீர்த்தி சுரேஷூக்காக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், த்ரிஷா, சமந்தா!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏஆர் ரகுமான், நடிகைகள் த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே மகேஷ்பாபுவின் ’சர்க்காரு வாரி பாட்டா’ செல்வராகவனுடன் ‘சாணிக்காகிதம்’ சிரஞ்சீவியுடன் ’போலோ சங்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ், ‘வாஷி’ என்ற படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக டொவினோ தாமஸ் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் ஆகிய இருவரும் வழக்கறிஞர்கள் வேடத்தில் நடித்து இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏஆர் ரகுமான், த்ரிஷா சமந்தா ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

விஷ்ணு ராகவ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு காளிதாஸ் மேனன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.