மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்.. செல்பி எடுக்க குவிந்த இளம்பெண்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த நிலையில் இளம்பெண்கள் அவருடன் செல்பி எடுக்க குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ’ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் கொச்சியில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்ள கொச்சி சென்று இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொச்சியை சுற்றி பார்ப்பதற்காக மெட்ரோவில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ரசிகைகள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வருகிறது
நீண்ட இடைவெளிக்கு பின் ‘ஆடுஜீவிதம்’ படம் மூலம் மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ரீஎண்ட்ரி ஆகி உள்ளார் என்பதும் இந்த படம் மார்ச் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரித்விராஜ், நடிகை அமலா பால் உட்பட பலர் நடித்துள்ளனர்.
♥️#ARR #ARRahman pic.twitter.com/f4XLNWIjUS
— Nivas Rahmaniac (@NivasPokkiri) February 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com