ரஜினியின் '2.0'வில் இணைந்த பிரிட்டன் பாடகர்

  • IndiaGlitz, [Tuesday,November 08 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருட தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தின் ரொமான்ஸ் பாடல் ஒன்றை பிரிட்டன் பாடகர் அர்ஜூன் குமாரசாமி அவர்களை பாட வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல் '2.0' படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் குறித்து சமந்தாவின் உறுதியான தகவல்

தென்னிந்தியாவின் முன்னணி நாயகி சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்...

தந்தையை அடுத்து மகனை இயக்கும் மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய முதல் படமான 'பகல் நிலவு' படத்தில் மறைந்த பிரபல நடிகர் முரளி நடித்திருந்தார்...

விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார்?

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது...

பாட்ஷா'வுடன் கனெக்சன் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல்...

விஜய்சேதுபதியின் முதல் தெலுங்கு படம்

இந்த ஆண்டில் விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் அவர் நடித்த 'புரியாத புதிர்' வெளியாகவுள்ளது...