25 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

கடந்த 1992ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் இசையமைத்த இன்னொரு படம் 'யோதா' என்ற மலையாள படம். இது ரஹ்மானின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின்னர் ரஹ்மான் மலையாள படங்களுக்கு இசையமைக்கவில்லை. இந்த நிலையில் 25 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மலையாள படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரிதிவிராஜ் நடிக்கும் 'Aadujeevitham' என்ற படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பிளஸ்ஸி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சியால் முற்றிலும் வித்தியாசமான இசை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

நான் செல்லும் இடமெல்லாம் கோமியம் தெளிப்பீர்களா? பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த மேடை புனிதத்தன்மையை இழந்துவிட்டதாக கருதிய பாஜகவினர் அந்த மேடையை கோமியம் ஊற்றி கழுவியதாக தெரியவந்துள்ளது.

17 வருடங்களுக்கு பின் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்

கடந்த 2001ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமான படம் 'மின்னலே'. இதே படத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அறிமுகமானார்.

கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெறுவது சந்தேகம்தான்: தமிழிசை

உலக நாயகன் கமல்ஹாசன் மீது வைக்கப்பட்டிருந்த ஒரே குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான்.

எம்ஜிஆர் பட பூஜைக்கு தலைமை தாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டிருந்தார்

அரசியல் கட்சி அறிவிக்கும் தேதி அறிவிப்பு: கமல்ஹாசன் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதாக ஏற்கனவே உறுதி செய்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும்,