தலைவருடன் என்னுடைய இளவரசி: ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 வருடங்களுக்கு முன் தன்னுடைய மகள் காதிஜா உடன் எடுத்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்தப்படம் கடந்த 1999ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக அவர் தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் என்னுடைய செல்ல இளவரசி தலைவருடன் நிற்கும் புகைப்படம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பதிவில் குறிப்பிட்டுளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மகளை கையில் தூக்கி வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் இருக்கும் ரஜினிகாந்த்தின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல் ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒரு பொய்யான தகவலால் ஒட்டுமொத்த மாநிலமும் முடக்கப்பட்ட சம்பவம்!!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணம் ஒன்றில் கடந்த புதன்கிழமை அன்று புதிதாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது.

அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா??? துணை முதல்வரின் பரபரப்பு விளக்கம்!!!

அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு…

பாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான இந்து கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தண்ணீரில் குளிச்சா உயிர் போய்விடும்… இப்படி ஒரு விசித்திர வியாதியா???

அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவருக்கு தண்ணீரில் குளித்தாலே உயிர் போய்விடும் வகையில் ஆபத்தான நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கழுவி கழுவி ஊத்தும் கமல்: சிரித்து கொண்டே மழுப்பும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோவில் ரூல்ஸை மதிக்க வேண்டும் என்று கமல் சொல்ல சொல்ல, அதை ஒரு நமட்டு சிரிப்புடன் பாலாஜி இருப்பது கமலுக்கு