ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வருக்கு நன்றி: ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மகள் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது மனைவி மற்றும் மருமகளுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி எனக்கூறி ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தங்கள் துணைவியாருடனும், மருமகளுடனும் வருகை புரிந்து அன்பு மணமக்களை வாழ்த்தி எங்கள் இல்லத் திருமண விழாவைச் சிறப்பித்தமைக்கு ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!
தங்கள் துணைவியாருடனும், மருமகளுடனும் வருகை புரிந்து அன்பு மணமக்களை வாழ்த்தி எங்கள் இல்லத் திருமண விழாவைச் சிறப்பித்தமைக்கு ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்! https://t.co/yAvq6SzacE
— A.R.Rahman (@arrahman) June 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout