'அயலான்' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று பட தயாரிப்பு நிறுவனம் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்தது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் 'அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘அயலா அயலா’ என்ற பாடல் வரும் டிசம்பர் 20ஆம் தேதி புதன்கிழமை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் மீண்டும் பொங்கல் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே வெளியான இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.
I had an intruder while recording my next song! 👽😃#AyalaaAyalaa - second single from #Ayalaan releasing on Wednesday, 20th of December.
— A.R.Rahman (@arrahman) December 18, 2023
Are you ready?#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @Ravikumar_Dir… pic.twitter.com/K7HmqE8XfH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments